×

பாஜகவை கழற்றிவிட்டதற்கு வரவேற்பு!: அதிமுக கூட்டணியில் தொடர்வோம் என புரட்சி பாரதம் கட்சி அறிவிப்பு..!!

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றிவிட்டதற்கு புரட்சி பாரதம் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை புரட்சி பாரதம் வரவேற்கிறது. சமீப காலமாக திராவிட தலைவர்களையும், அதிமுக மாநாட்டையும் விமர்சித்து வந்த பாஜகவை கண்டித்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது. அதிமுகவின் தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இயங்கி வரும் நிலையில், அவர்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக நிற்போம்.

அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சியும் ஓர் அங்கம் வகிக்கும் என்பதை கட்சியின் தலைவர் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் பங்கேற்று புரட்சி பாரதம் கட்சி தேர்தலை எதிர்கொள்ளும். என்.டி.ஏ – இண்டியா என்று எந்த ஒரு கூட்டணியிலும் பங்கேற்காமல், அதிமுக தலைமையில் நாங்கள் தனி கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

The post பாஜகவை கழற்றிவிட்டதற்கு வரவேற்பு!: அதிமுக கூட்டணியில் தொடர்வோம் என புரட்சி பாரதம் கட்சி அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Revolution Bharat Party ,Chennai ,Revolution Bharatam Party ,Bajaku ,Dinakaran ,
× RELATED வள்ளுவர் கோட்டத்தில் தடைமீறி...